Sunday, November 2, 2014

தோழி

பயணம் பழுதடைந்த உச்சத்தில் , இறைவன் அனுப்பிய மூன்றாது  மனிதராய் எங்கோ ஏகாந்தத்தில் பரிட்சியமற்ற முகம் , தோழி என்ற ஸ்தானத்தில் .

அவள் என்றும் மொழியும் மூன்று வார்த்தை "நம்ப தான் கெத்து "


Monday, September 9, 2013

தாய்

வந்த வழி அறியா ,  போகும் வழி முடியா
துச்சமாய் எண்ணிய நும் வாழ்வும் அர்த்தம் காணும் இரு விழியாய்..
அவள் நாடி நரம்பில் உன் அதிர்வைச் சுமக்கும் நொடியை நீ ரசிக்கும்போது...

#தாய்

Thursday, May 24, 2012

பெண்

நட்பை  நாடகமாக்கி
 உறவை  எருவாக்கி
 உணர்வை  உரைபனியாக்கி
நிகழ்வுகளை நித்தியத்தில் சேர்ப்பாள் --பெண் --              

Saturday, January 7, 2012

ஸ்பரிசத்தில். !

பேசும் விழிகளின் நாணச் சாய்ப்பில்
உறைந்து போனேன்
அபூர்வமாய் நாணம் மீறிய
மோகப் பார்வையில் கரைந்து போனேன் !

எழுதிய விழிகள்
எத்தனை கதை சொல்லும் -அதன்
ஈர்ப்பில் உள் விழுந்து
ஆழத்தில் .. இன்னும் ஆழத்தில்...
யாரும் அறியா ஆழத்தில்....
மூச்சையுற்று நிற்கதியாய்
மரிப்பின் மௌனத்தில் இருக்கையில்
திருத்திய செவ்விதழ்களின்
ஸ்பரிசத்தில் உயிர்ப்பாகி
மரணமும் ஜனனமுமாய் ...
முடிவில்லா காதலில்.
முடிக்கவும் தெம்பில்லை.
*********

துரத்தும் நினைவுகள்
திரும்பாத காலங்கள்
மாற்றி எழுதும் வேட்கை
மறுபடியும் பிறக்க வேண்டும் ..
**********

எங்கோ ஏகாந்தத்தில்
எதிரெதிரே இருவரும்.
எதையோ வெறித்திருக்கும்
மௌனத்தின் உரசலில்
நெருப்பின் ஜ்வாலை..
உடைக்க மனமில்லை
**********

Monday, November 28, 2011

எழுந்து வா தோழா !!

முதல் காதலை காவியமாய் சுவாசித்த ஒவ்வொரு இதையமும்
ஒரு கனத்தில் பழுதடையும் , தலைவியின் பிரிவில் ...
நும் காவியம் கதையல்ல ,கவிதையின் களஞ்சியம்.
எழுந்து வா தோழா !
மாற்றி எழுதும் வேட்கை மறுபடி பிறக்க வேண்டும் !!!

Monday, November 21, 2011

ஊடல் !!

வெற்று உடம்பு
காத்திருக்கும் உணர்வுகள்
விரும்பிய இதயம் வியர்வையின் ஸ்பரிசத்தில்
உறவாடிய வேட்கை
என் நீண்ட நாள் உண்ணாவிரதம்
முடிவை எட்டியது மஞ்சத்தில் !!!